ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய பிரதமருக்கு உயரிய விருதை வழங்கியது பிரான்ஸ்

ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் உக்ரைனுக்கான ஆதரவு ஆகியவற்றில் பிரான்ஸுடன் இணைந்து பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில், பிரித்தானியா பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) பிரான்ஸின் மிக உயரிய தேசிய விருதான 'லெஜியன் ஆஃப் ஆனர்' (Légion d’honneur) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் உக்ரைனுக்கான ஆதரவு ஆகியவற்றில் பிரான்ஸுடன் இணைந்து பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில், பிரித்தானியா பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) பிரான்ஸின் மிக உயரிய தேசிய விருதான ‘லெஜியன் ஆஃப் ஆனர்’ (Légion d’honneur) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியால் இந்த விருது வழங்கப்படும் முதல் பிரித்தானியா பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆவார்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஐரோப்பாவிற்கு ஒரு முக்கியமான கட்டத்தில் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த நாடுகளின் கூட்டமைப்பான coalition of the willing அமைப்பை உருவாக்குவதில் ஸ்டார்மர் காட்டிய தலைமைத்துவத்திற்காக இம்மானுவேல் மேக்ரான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விருதை அவருக்கு வழங்கினார்.

இதற்கு முன்பு இதே போன்றதொரு விருதை (இதனை விட உயர் மட்டத்திலான ‘Grand-Croix of the Légion d’honneur’ விருது) பெற்ற ஒரே பிரித்தானியா பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) ஆவார்.

இரண்டாம் உலகப் போரின் போது அவரது தலைமைத்துவம் மற்றும் பிரான்ஸுடனான நெருங்கிய உறவை அங்கீகரிக்கும் வகையில் 1958 இல் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக, சர்வதேச அரங்கில் தனது கடைசி நிகழ்வுகளில் ஒன்றாக பாரிஸில் நடைபெற்ற பிரான்ஸின் தேசிய தினமான ‘பாஸ்டில் தின’ (Bastille Day) கொண்டாட்டங்களில் கீர் ஸ்டார்மர் கலந்துகொண்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி