செய்தி விளையாட்டு

சூப்பர் ஹிட் உலகக்கோப்பை: அமெரிக்காவில் புதிய சாதனை

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) பேர் கண்டுகளித்துள்ளனர்.

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) பேர் கண்டுகளித்துள்ளனர்.

இது முந்தைய பார்வைகளின் சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளதுடன், பல தசாப்த கால முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டிற்கான வரவேற்பு எந்த அளவிற்குப் பெருகியுள்ளது என்பதையும் உணர்த்தியுள்ளது.

நியூஜெர்சியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் கோல் எதும் அடிக்காத நிலையில், கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

(Fox) நிறுவனத்தின் ஆங்கில நேரலை ஒளிபரப்பை 3.89 கோடிப் பேரும், காம்காஸ்ட் நிறுவனத்தின் ‘டெலிமுண்டோ டிவி’ மற்றும் ‘பீகாக்’ ஸ்ட்ரீமிங் தளத்தின் ஸ்பானிஷ் மொழி நேரலையை 2.39 கோடிப் பேரும் பார்த்ததாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை, 2022 கதார் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை அமெரிக்காவில் பார்த்த 2.23 கோடி பார்வையாளர்களை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமையைப் பெற பாக்ஸ் நிறுவனம் சுமார் 48.5 கோடி டாலர்களையும் (485m), காம்காஸ்ட் நிறுவனம் சுமார் 60 கோடி டாலர்களையும் (600m) செலுத்தியிருந்த நிலையில், இந்த சாதனை பார்வையாளர்களின் எண்ணிக்கை அவர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளதாகப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், தொடரின் பல நாக்-அவுட் போட்டிகள், அமெரிக்காவின் பிற முக்கிய விளையாட்டுத் தொடர்களின் இறுதிப்போட்டிகளை விட அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து முதன்முறையாக நடத்திய இந்த உலகக்கோப்பைத் தொடர், அமெரிக்க நேரப்படி போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய தலைசிறந்த வீரர்களின் கடைசி உலகக்கோப்பையாக இது இருக்கலாம் என்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கு முன் அமெரிக்கா 1994-இல் இத்தொடரை நடத்தியிருந்தது.

அடுத்த உலகக்கோப்பைத் தொடர் 2030-இல் ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் இணைந்து நடத்தப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து 2034-இல் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.

இந்த இரு தொடர்களின் போட்டி நேரங்கள் அமெரிக்க நேரத்திற்கு வசதியாக இருக்காது என்பதால், வருங்காலங்களில் நேரலை பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்று குறையக்கூடும் எனக் கருதப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி