இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு

செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக 4 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 11 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் 94 நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 471 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 455 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் நேற்று செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்குச் சென்று அகழ்வுப் பணியினை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிபுணர் குழுவினருடன் நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை