அமெரிக்கர்கள் போரை எதிர்க்கவில்லை: ஈரான்மீதான தாக்குதல் தொடரும்
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவர்கள் (ஈரான்) கடுமையான விலையைக் கொடுக்கப் போகிறார்கள், அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறார்கள்” எனவும் டிரம்ப் கூறினார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடர்பில் மக்கள் ஆதரவு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில், “உண்மையில், அமெரிக்கர்கள் இந்த போருக்கு எதிரானவர்கள் அல்லர் ” எனக் குறிப்பிட்டார்.
எனினும், கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க பொதுமக்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருவதை பல்வேறு கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன.
இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.




