ஐரோப்பா செய்தி

பிரித்தானிய தூதரக விருந்தை நிறைவு செய்து புறப்பட்ட மன்னர்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானிய தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட  மன்னர் சார்லஸ் (Charles) மற்றும் ராணி கமிலா (Queen Camilla) தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும்  ஓய்வுபெற்ற பிரித்தானிய ஒலிம்பிக் நீச்சல் வீரர் டாம் டேலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக,  இன்றைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இதன்மூலம் நிறைவடைந்துள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா (Camilla) […]

ஐரோப்பா செய்தி

மன்னரின் வருகை – வெள்ளை மாளிகையில் அபூர்வ பாதுகாப்பு ஏற்பாடு

  • April 28, 2026
  • 0 Comments

மன்னர் சார்லஸ் (King Charles) வருகையை முன்னிட்டு, வெள்ளை மாளிகை (White House) சுற்றுவட்டாரத்தில் அபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாம் இதற்கு முன்பு அரிதாகவே இப்படியான கடுமையான பாதுகாப்பை கண்டுள்ளதாக செய்தியாளர் ஒருவர் கூறினார். வெள்ளை மாளிகைக்கு செல்லும் பென்சில்வேனியா அவென்யூவின் (Pennsylvania Avenue) ஒரு முழுத் தெரு போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்தது. அப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களின் அடையாள அட்டைகள் பொலிஸாரால் தீவிரமாகச் சோதிக்கப்பட்டன. இவ்வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாக மிக உயர்மட்ட […]

செய்தி

மே தினக் கொண்டாடத்திற்கான ஐ.ம.ச வின் அழைப்பை மறுத்த ஐ.தே.க 

  • April 28, 2026
  • 0 Comments

மே தினக் கொண்டாடத்தில் தங்கள் கட்சியுடன் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரள கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இம்முறை மே தினம் மே முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் வருவதால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளில்  ஈடுபடாமல் அதனை மத வழிபாடுகளுக்காக ஒதுக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மே முதலாம் திகதி பௌர்ணமி தினமாக அமையும் பட்சத்தில், […]

செய்தி

மெகசின் சிறைச்சாலை மோதல் சிறை அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

  • April 28, 2026
  • 0 Comments

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கும் சிறைக்காவலர் ஒருவருக்கும் இடையே நேற்று (27) முற்பகல் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக […]

செய்தி

பதவியிலிருந்து விலக ஷம்மி சில்வா தீர்மானம்

  • April 28, 2026
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் […]

செய்தி

பிராந்திய மோதல்கள் அனைத்தும் பேச்சுவார்த்தையால் தீர்க்கப்பட வேண்டும் – கட்டார் வலியுறுத்தல்

  • April 28, 2026
  • 0 Comments

பிராந்தியத்தில் உருவாகும் எந்தவொரு மோதலும் பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கட்டார் (Qatar) வலியுறுத்தியுள்ளது. கட்டாரின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், தற்போதைய பிரச்சினை மத்தியஸ்தருடன் தொடர்புடையதல்ல என்றும், பாகிஸ்தான் (Pakistan) தனது மத்தியஸ்தப் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுடனும் கட்டார் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தானின் முயற்சிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]

செய்தி

போரால் ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் – ஸ்வீடன் எச்சரிக்கை

  • April 28, 2026
  • 0 Comments

போர்நிலை காரணமாக ஜெட் எரிபொருள் (Jet Fuel) பற்றாக்குறை உருவாகக்கூடும் என ஸ்வீடன் (Sweden) அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்வீடனின் எரிசக்தி அமைச்சர் எப்பா புஷ் (Ebba Busch) இதனைத் தெரிவித்துள்ளார். மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டால், ஸ்வீடனில் விமான எரிபொருளுக்குப் பங்கீட்டு முறை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், எதிர்கால சந்தை நிலைமையைப் பொறுத்தே தீர்மானம் மேற்கொள்ள முடியும் என எரிசக்தி முகமையின் பொது இயக்குநர் கரோலின் அசெரப் (Caroline Asserup) தெரிவித்துள்ளார்.

செய்தி

தமிழகத்தில் தாக்கப்பட்ட இலங்கை மீனவர் – வன்மையாக கண்டித்த நாமல்

  • April 28, 2026
  • 0 Comments

தமிழகத்தில் இலங்கை மீனவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டமையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூர் காவல்துறையினர் முன்னிலையில் , தமிழக மீனவர்களால் அந்த மீனவர் தாக்கப்பட்டதாகக் கூறிய நாமல், அவரது உடனடிப் பாதுகாப்பை உறுதிசெய்து, அவரை விரைவாகத் தாயகம் திரும்புவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். […]

செய்தி

ஈரானுடன் இணைந்து சதி செய்ததாக குற்றச்சாட்டு- பஹ்ரைனில் ஐவருக்கு ஆயுள் தண்டனை

  • April 28, 2026
  • 0 Comments

ஈரானுடன் (Iran) இணைந்து பயங்கரவாத மற்றும் விரோதச் செயல்களில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு பஹ்ரைன் (Bahrain) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பஹ்ரைனின் அரசு வழக்கறிஞர் வெளியிட்ட தகவலின்படி, இரண்டு ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டினரும், மூன்று பஹ்ரைன் குடிமக்களும் இந்த தண்டனை பெற்றுள்ளனர். தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில், பஹ்ரைன் இராச்சியத்திற்கு எதிரான வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு கொள்வது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், பஹ்ரைனுக்கு எதிரான ஈரானின் […]

செய்தி

திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடி செல்லும் விஜய்..

  • April 28, 2026
  • 0 Comments

தவெக தலைவர் விஜய் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இதன்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக இந்த தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். […]