மன்னரின் வருகை – வெள்ளை மாளிகையில் அபூர்வ பாதுகாப்பு ஏற்பாடு
மன்னர் சார்லஸ் (King Charles) வருகையை முன்னிட்டு, வெள்ளை மாளிகை (White House) சுற்றுவட்டாரத்தில் அபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாம் இதற்கு முன்பு அரிதாகவே இப்படியான கடுமையான பாதுகாப்பை கண்டுள்ளதாக செய்தியாளர் ஒருவர் கூறினார்.
வெள்ளை மாளிகைக்கு செல்லும் பென்சில்வேனியா அவென்யூவின் (Pennsylvania Avenue) ஒரு முழுத் தெரு போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்தது.
அப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களின் அடையாள அட்டைகள் பொலிஸாரால் தீவிரமாகச் சோதிக்கப்பட்டன.
இவ்வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாக மிக உயர்மட்ட தலைவர்கள் வருகை தரும் நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்கா , பிரித்தானியமற்றும் கொலம்பியா மாவட்டத்தின் கொடிகளால் தெருக்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வெள்ளை மாளிகை நுழைவாயிலில் பெரிய வெள்ளை கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.
வருகை தரும் முக்கிய பிரமுகர்கள் வாகனங்களில் ஏறும் தருணங்களை வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளே மிகுந்த பரபரப்பும் கூட்டமும் நிலவியதாகவும், குறிப்பாக பிரித்தானிய
செய்தியாளர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.





