செய்தி

மெகசின் சிறைச்சாலை மோதல் சிறை அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கும் சிறைக்காவலர் ஒருவருக்கும் இடையே நேற்று (27) முற்பகல் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு-14, நவகம்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி