செய்தி

பிராந்திய மோதல்கள் அனைத்தும் பேச்சுவார்த்தையால் தீர்க்கப்பட வேண்டும் – கட்டார் வலியுறுத்தல்

பிராந்தியத்தில் உருவாகும் எந்தவொரு மோதலும் பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கட்டார் (Qatar) வலியுறுத்தியுள்ளது.

கட்டாரின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், தற்போதைய பிரச்சினை மத்தியஸ்தருடன் தொடர்புடையதல்ல என்றும், பாகிஸ்தான் (Pakistan) தனது மத்தியஸ்தப் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுடனும் கட்டார் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தானின் முயற்சிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் நாளிலிருந்தே கட்டாரின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும், அனைத்து மோதல்களும் இராஜதந்திர வழியிலும் பேச்சுவார்த்தை மூலமும் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!