செய்தி

மே தினக் கொண்டாடத்திற்கான ஐ.ம.ச வின் அழைப்பை மறுத்த ஐ.தே.க 

மே தினக் கொண்டாடத்தில் தங்கள் கட்சியுடன் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரள கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இம்முறை மே தினம் மே முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் வருவதால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளில்  ஈடுபடாமல் அதனை மத வழிபாடுகளுக்காக ஒதுக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே முதலாம் திகதி பௌர்ணமி தினமாக அமையும் பட்சத்தில், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது  பொருத்தமானது அல்ல என்று ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்த காலத்திலேயே சுட்டிக்காட்டியிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் அல்லது வேறு எந்தவொரு கட்சியினதும் மே தினப் பேரணிகளில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கேற்பதற்கான வாய்ப்பில்லையென அவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயல்படுவது பலரினதும் எதிர்பார்ப்பாகும் என்பதால்,

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாகவும்

அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!