செய்தி

ஈரானுடன் இணைந்து சதி செய்ததாக குற்றச்சாட்டு- பஹ்ரைனில் ஐவருக்கு ஆயுள் தண்டனை

ஈரானுடன் (Iran) இணைந்து பயங்கரவாத மற்றும் விரோதச் செயல்களில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு பஹ்ரைன் (Bahrain) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

பஹ்ரைனின் அரசு வழக்கறிஞர் வெளியிட்ட தகவலின்படி, இரண்டு ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டினரும், மூன்று பஹ்ரைன் குடிமக்களும் இந்த தண்டனை பெற்றுள்ளனர்.

தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில், பஹ்ரைன் இராச்சியத்திற்கு எதிரான வெளிநாட்டு அமைப்புகளுடன்

தொடர்பு கொள்வது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பஹ்ரைனுக்கு எதிரான ஈரானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மேலும் 25 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான போர் சூழ்நிலையுடன் தொடர்புபடுத்தி பஹ்ரைனில் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறை என்று மனித உரிமை ஆர்வலர் மரியம் அல்கவாஜா (Maryam Alkhawaja) தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!