செய்தி

தமிழகத்தில் தாக்கப்பட்ட இலங்கை மீனவர் – வன்மையாக கண்டித்த நாமல்

தமிழகத்தில் இலங்கை மீனவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டமையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்த சம்பவம் மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூர் காவல்துறையினர் முன்னிலையில் , தமிழக மீனவர்களால் அந்த மீனவர் தாக்கப்பட்டதாகக் கூறிய நாமல், அவரது உடனடிப் பாதுகாப்பை உறுதிசெய்து, அவரை விரைவாகத் தாயகம் திரும்புவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நமது மீனவர்களைப் பாதுகாக்க, வலுவான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்பதன் அவசரத் தேவையையும் இந்தச் சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மண்ணில் இலங்கை மீனவர்கள் தாக்கப்படும்போது மௌனம் காக்கும் அதேவேளை, தமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் பிரச்சினைகளை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!