பிரித்தானிய தூதரக விருந்தை நிறைவு செய்து புறப்பட்ட மன்னர்
பிரித்தானிய தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட மன்னர் சார்லஸ் (Charles) மற்றும் ராணி கமிலா (Queen Camilla) தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற பிரித்தானிய ஒலிம்பிக் நீச்சல் வீரர் டாம் டேலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மிகவும் பரபரப்பான செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, இன்றைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இதன்மூலம் நிறைவடைந்துள்ளது.
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா (Camilla) மேற்கொண்டுள்ள நான்கு நாள் அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.





