செய்தி

திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடி செல்லும் விஜய்..

தவெக தலைவர் விஜய் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

இதன்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக இந்த தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின.

தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக.

தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.

வரும் மே 4 ஆம் திதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை நகருக்கு அவர் வந்தார்.

தொடர்ந்து அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்றார். அங்கு கடற்கரையில் கால்களை அவர் நனைத்தார்.

பின்னர் கோயிலிக்குள் சென்று மூலவரான சுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

அவருடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். அப்போது அவருக்கு வெற்றிவேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. தரிசனத்தை முடித்துக் கொண்ட பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஸ்தலம் ஆகும். இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, முருகனை வழிபடுவது வழக்கம்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் இன்று சாமி தரிசனம் செய்த நிலையில்,  அடுத்த ஆன்மிகப் பயணமாக சீரடி சாய் பாபா கோவிலுக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!