பிரிட்டன் ராணுவ இரகசியங்களை குறிவைக்கும் சீனா! உளவு பிரிவு எச்சரிக்கை!
பிரிட்டன் அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகளை இலக்கு வைத்து, LinkedIn போன்ற வேலைவாய்ப்பு இணையத்தளங்கள் ஊடாக சீன உளவாளிகள் இரகசியத் தகவல்களைத் திரட்ட முயன்று வருவதாக MI5 எச்சரித்துள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பைவ் ஐஸ்’ (Five Eyes) உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு இது தொடர்பான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீன இராணுவ உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள், தனியார் நிறுவனங்கள் அல்லது சிந்தனைக் குழுக்களின் (Thinktanks) பணியாளர்கள் போல […]












