இலங்கை செய்தி

சகோதரனைத் தேடி இந்தியா சென்ற வவுனியா இளைஞர் பாம்பனில் கைது

பெற்றோர் பிரான்சிலும் சகோதரன் இந்தியாவிலும் வசித்து வரும் நிலையில், படகு மூலம் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்பன் பகுதியில் வைத்துத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோர் பிரான்சிலும் சகோதரன் இந்தியாவிலும் வசித்து வரும் நிலையில், படகு மூலம் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்பன் பகுதியில் வைத்துத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த 21 வயதுடைய மேற்படி இளைஞர், இந்தியாவில் தங்கியுள்ள தனது சகோதரனைச் சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை படகு மூலம் சட்டவிரோதமாகத் தமிழகக் கடற்கரையைச் சென்றடைந்தபோதே பொலிஸாரின் கண்காணிப்பில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் தங்கியிருந்த வீட்டில் தனது சித்தியாருடன் ஏற்பட்ட கை கலப்பு மற்றும் தொடர்ச்சியான குடும்ப முரண்பாடுகள் காரணமாகவே, மனவேதனையில் தனது சகோதரனைத் தேடித் தமிழகத்துக்கு வந்ததாகக் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆரம்பக் கட்ட விசாரணைகளின்போது தமிழகப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகப் படகுப் போக்குவரத்து பின்னணி மற்றும் சட்டவிரோதக் ஊடுருவல் குறித்து தமிழகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை