திருமலையில் விவசாயியின் சைக்கிளை திருடியவருக்கு விளக்கமறியல்!
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, திருடிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொரவெவ கமநல சேவைகள் திணைக்களத்தில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சென்ற விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு களவாடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிள் உரிமையாளர் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் CCTV காட்சிஉதவியுடன் […]












