ஹவுத்திகள்மீது தாக்குதல் வேண்டாம்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் தனது தீவிர வலதுசாரி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோளிட்டு Haaretz நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலியத் தலைவர்கள் , இராணுவ நடவடிக்கைக்குப் பதிலாக இராஜதந்திர வழியைப் பின்பற்ற வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹவுத்திகளின் நிலப்பரப்பு ஆக்கிரமிப்புகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ‘பாப் அல்-மண்டப்’ (Bab al-Mandab) நீரிணை மீதான அவர்களின் புதிய […]













