யேமனில் ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்: 53 பேர் பலி; 200 பேர் காயம்
யேமனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அல்-அய்லாம் இராணுவ முகாம் மீது ஹூதி அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் ஆதரவைப் பெற்ற ஆயுதக் குழுவான ஹூதிகள், திங்கட்கிழமை ஷப்வா மாகாணத்தில் அமைந்துள்ள குறித்த இராணுவ முகாமை இலக்குவைத்து மூன்று ஏவுகணைகளை ஏவியதாக யேமன் அரசாங்கப் படைகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்புப் படை ஆட்சேர்ப்பாளர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச […]













