இலங்கை செய்தி

ஊழல்வாதிகளுக்கு எதிரான வேட்டை: அரசுக்கு பொன்சேகா ஆதரவு

" தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது" - என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

” தலைமறைவாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மீண்டும் மக்கள் மத்தியில் வந்து தலைதூக்க முற்படுகின்றனர். அரச வளங்களைச் சுரண்டிய இந்த அரசியல்வாதிகளுக்கு சில அரச ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். இதனால் இறுதியில் நாடு நாசமடைந்தது. வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது. மக்களும் துன்பப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல், மோசடிகளுக்கு எதிரான சக்தியாக உள்ளது. நாட்டை நாசமாக்கிய ஊழல்வாதிகள் குடும்பத்துடன் சிறைச்சாலைக்குச் செல்கின்றனர். இது கட்டாயம் நடைபெற வேண்டிய விடயம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் ஊழல்வாதிகள் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்கள். கடந்த காலங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்பட்டனர். தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.

எனவே, இந்த அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனது முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

ஊழல்வாதிகளின் கைகளுக்கு ஆட்சி மீண்டும் செல்லக்கூடாது. இந்த அரசாங்கம் தேவையில்லை என்றால், இதைவிடச் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஊழல் அற்ற தரப்பினரே ஆட்சிக்கு வர வேண்டும்’ என்றார் பொன்சேகா.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை