இலங்கை செய்தி

இலங்கையில் அமுலுக்கு வந்தது ஊழல் தடுப்புச் சட்டம்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலத்திற்கான சான்றிதழை இன்று (19) வழங்கினார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலத்திற்கான சான்றிதழை இன்று (19) வழங்கினார்.

குறித்த சட்டமூலம், பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமானவரால் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அடையாளம் காணப்பட்ட சட்டரீதியான, விளக்கமளித்தல் சார்ந்த, நிர்வாகரீதியான மற்றும் தொழில்நுட்பரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளைச் சீர்செய்தல், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரலின்போது எதிர்கொள்ளப்படும் சவால்களுக்குத் தீர்வுகாணுதல் ஆகியவையும் இதன் நோக்கங்களாகும்.

அத்துடன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) நிர்வாகச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை மையப்படுத்தப்பட்ட மின்னணு முறைமையின் ஊடாகச் சமர்ப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கும் இந்தத் திருத்தங்கள் வழிவகுக்கும்.

இந்தத் திருத்தங்கள், இலங்கையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஊழல் தடுப்புச் சட்டத்தை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் நடைமுறைப்படுத்துவதற்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமாக சட்டமாக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை