அமெரிக்கா ஈரான் மீது எப்போது, ஏன் பொருளாதாரத் தடைகளை விதித்தது?
ஈரான் மீது அமெரிக்கா நீண்டகாலமாகத் தடைகளை விதித்து வருகிறது. 1979-இல் தொடங்கிய இந்தத் தடைகள் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கப் போரின் காரணமாக இந்த ஆண்டும் தொடர்கிறது. 1979 ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானிய மாணவர்கள் தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கைப்பற்றி, அமெரிக்கத் தூதர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா முதன்முறையாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிய இறக்குமதிகளுக்குத் தடை விதித்ததுடன், சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஈரானிய சொத்துக்களையும் முடக்கியது. […]













