NPP அரசின் நேர்மையாலேயே வடக்கு மக்கள் மத்தியில் பேராதரவு
“இனப்பிரச்சினை தொடர்பில் நமக்குத் தெளிவான புரிதல் உள்ளது. நாம் போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை. உண்மையான வேலைத்திட்டத்துடனேயே வடக்கிற்குச் செல்கிறோம்” என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி, இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்தினார்கள். ஆனால், இனப்பிரச்சினை குறித்து நாம் […]













