உலகம் செய்தி

பாகிஸ்தான் ராணுவ தளபதி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

  • April 25, 2026
  • 0 Comments

  ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் Field Marshal Asim Munir ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. அதேவேளை, பாகிஸ்தான் பயணத்தை தொடர்ந்து, தனது அடுத்தகட்டமாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இலங்கை செய்தி

NPP அரசுக்கு தலையிடியாக மாறியுள்ள’ இணைய மோசடி’!

  • April 25, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவிய இணையக் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட சம்பவம் குறித்து சர்வதேச நாணய நிதியம் IMF அவதானம் செலுத்தியுள்ளது. ஆங்கில இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. பொருளாதார மறுசீரமைப்புத் துறையின் கணினி அமைப்புகளுக்கு அனுமதியின்றி அணுகப்பட்டதை உறுதி செய்து இலங்கை நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த முக்கிய நிகழ்வை நாங்கள் கவனத்தில் கொண்டு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று சர்வதேச […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் நடக்கப்போவது என்ன? நேரடி சந்திப்பு நடக்குமா?

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுக்களுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் நேரடி பேச்சு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பினரும் அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியே பேச்சு நடத்தவுள்ளனர். இப்பேச்சு வெற்றிபெற்றால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இரு நாடுகளும் நேரடிப் பேச்சில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பிராந்திய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதே இந்த இராஜதந்திர நகர்வுகளின் முக்கிய நோக்கமாகும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்கள் இஸ்லாமாபாத் வந்துள்ளன என தெரிகின்றது.

விளையாட்டு

ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • April 25, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 36 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த சீசனில் […]

விளையாட்டு

RCB அணி வெற்றிநடை!

  • April 25, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீசியது. 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றது. புpன்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. ஜேக்கப் பெத்தல் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன் பின்னர் […]

உலகம் செய்தி

கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள தயாராகிறது British Airways!

  • April 25, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பான International Airlines Group (IAG) விமான பயணச்சீட்டுகளின் விலையை அதிகரிக்கபோவதாக அறிவித்துள்ளது. பொதுவாக விமான நிறுவனங்கள் எரிபொருளை முன்னதாகவே நிலையான விலைக்கு வாங்கும் முன்பதிவு பாதுகாப்பு முறையைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளிலிருந்து தப்ப முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, கூடுதல் எரிபொருள் செலவினங்களை […]

உலகம் செய்தி

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் இஸ்லாமாபாத் பயணம்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் பாகிஸ்தானில் 2ஆம் கட்ட அமைதிப் பேச்சுகள் இடம்பெறவுள்ளன. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கத் தரப்பில் டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் Steve Witkoff மற்றும் ட்ரம்பின் மருமகன் Jared Kushner ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அவர்கள் இன்று சனிக்கிழமை இஸ்லாமாபாத் செல்கின்றனர். ஈரானின் அணுஆயுதக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே முறையான உடன்படிக்கை எட்டப்படும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் நிபந்தனை விதித்துள்ளார். தற்போது ஹார்முஸ் நீரிணையில் நிலவும் கப்பல் போக்குவரத்து முடக்கம் மற்றும் இரு […]

இந்தியா செய்தி

மேற்காசிய போர்: இந்தியாவில் 3 நாள் விசேட மாநாடு!

  • April 24, 2026
  • 0 Comments

இந்திய தூதரக தலைவர்கள் மாநாடு புதுடெல்லியில் எதிர்வரும ஏப்ரல் 28 முதல் 30 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. உலக நாடுகளில் இந்திய தூதுவர்களாக சேவையாற்றுபவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் முதல் நாள், வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி மற்றும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவும் ஈரானும் முற்றுகையிட்டு உள்ளதால் ஏற்படும் கடுமையான பொருளாதார பின்விளைவுகள் ஆகியவை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கமளிக்கவுள்ளார். இரண்டாம் நாள் […]

இலங்கை செய்தி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்கிறது வடக்கு!

  • April 24, 2026
  • 0 Comments

‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.04.2026) நடைபெற்றது. வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு மற்றும் திட்டமிடல் குறித்து ஜப்பானின் ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் மற்றும் இலங்கையின் கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் அண்ட் ஆர்க்கிடெக்ட்ஸ் […]

இலங்கை செய்தி

நேட்டோவிலிருந்து ஸ்பெயின் நீக்கப்படுமா?

  • April 24, 2026
  • 0 Comments

நேட்டோ அமைப்பிலிருந்து ஸ்பெயினை நீக்குவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்றது என வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்டகனின் மின்னஞ்சலொன்றை மேற்கோள்காட்டியே இது தொடர்பில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தாலேயே ஸ்பெயின் இலக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. எனினும், நேட்டோ அமைப்பின் விதிமுறைகளுக்கமைய ஒரு உறுப்பு நாட்டை நீக்குவதற்கோ அல்லது இடைநீக்கம் செய்வதற்கோ ஏற்பாடு இல்லை என தெரியவருகின்றது. அதேபோல மேற்படி தகவலை ஸ்பெயின் பிரதமரும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். ஈரான்மீதான […]