செய்தி

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் ஆயுதப் பறிமுதல் நடவடிக்கை

ஆஸ்திரேலியா, சிட்னியில் யூதப் பண்டிகையின் போது 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியும் ஆயுதங்களைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் (Gun buyback) திட்டத்தில் இணையவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) சனிக்கிழமை தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, சிட்னியில் யூதப் பண்டிகையின் போது 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியும் ஆயுதங்களைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் (Gun buyback) திட்டத்தில் இணையவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) சனிக்கிழமை தெரிவித்தார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் (Bondi Beach) கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலைத் தொடர்ந்து, ஆயுதங்களைத் திரும்பப் பெறுவதற்கும், துப்பாக்கி உரிமங்களுக்கான சோதனைகளைக் கடுமையானாக்குவதற்கும், வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அல்பானீஸின் அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் சட்டங்களை இயற்றியது.

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி தொடங்கவுள்ள இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்ட முதல் மாநிலமாக மாறியது.

இந்நிலையில், “பாண்டியில் நாம் கண்டது போன்ற ஒரு யூத எதிர்ப்பு பயங்கரவாதத் தாக்குதல் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும்” முயற்சியாக, தேசியத் தலைநகரான கன்பராவை உள்ளடக்கிய ‘ஆஸ்திரேலியத் தலைநகரப் பிரதேசமும்’ (ACT) இதே போன்ற திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அல்பானீஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“ஆஸ்திரேலியர்களைச் சிறப்பாகப் பாதுகாப்பதற்காக, நமது வீதிகளில் இருந்து துப்பாக்கிகளை அகற்றும் பணிகளில் எங்களுடன் இணைந்து செயல்படும் ஆஸ்திரேலியத் தலைநகரப் பிரதேச அரசாங்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகரப் பிரதேசத்தில் 23,000 துப்பாக்கிகளும், 7,000க்கும் அதிகமான துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களும் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு இத்திட்டம் எப்போது தொடங்கும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பாண்டி கடற்கரைத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும், ஐஎஸ்ஐஎஸ் (Islamic State) அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் சட்டப்பூர்வமாகப் பெறப்பட்ட சக்திவாய்ந்த துப்பாக்கிகளையே இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தியுள்ளனர். உயிருடன் இருக்கும் சந்தேக நபர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் சாதனை அளவாக 4.1 மில்லியன் துப்பாக்கிகள் இருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

டாஸ்மேனியாவின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) 1996 ஆம் ஆண்டு துப்பாக்கிதாரி ஒருவர் 35 பேரைக் கொன்ற சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட ஆயுதப் பறிமுதல் நடவடிக்கைக்குப் பின், ஆஸ்திரேலியா மேற்கொள்ளும் மிகப்பெரிய துப்பாக்கித் திரும்பப் பெறும் திட்டமாக இது அமையவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி