உலகம் செய்தி

உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடும் சரிவு

  • May 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்க இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாகக் குறைந்துள்ளன. திங்கட்கிழமைக்குள் போர் நிறத்த ஒப்பந்தம் எட்டப்படலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio தெரிவித்திருந்தார். இதனையடுத்து, உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5.5% வீழ்ச்சியடைந்து பீப்பாயொன்றுக்கு சுமார் $97.90 டொலராக குறைந்துள்ளது. பிற்பகலில் சுமார் $97.70 அளவில் பதிவானது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பும் பேச்சுவார்த்தைகளில் […]

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை அண்மித்தது

  • May 25, 2026
  • 0 Comments

நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லடசத்தை அண்மித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 32 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி […]

இலங்கை செய்தி

மூளைக்காய்ச்சல் பரவல் – புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

  • May 25, 2026
  • 0 Comments

பாடசாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து சுகாதாரத் துறைகள் வைத்தியசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, நோயை கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ நடைமுறைகள், மாதிரி பரிசோதனைகள் மற்றும் பாடசாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது […]

செய்தி தமிழ்நாடு

தமிழக அரசினால் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு – குறு விவசாயிகளுக்கு முழு சலுகை

  • May 25, 2026
  • 0 Comments

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற பயிர்க்கடன்களுக்கு புதிய சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 2025 மே முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இதன்படி, .50,000 ரூபா வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே […]

இலங்கை செய்தி

ஹஜ் மற்றும் வெசாக் பண்டிகைகளை முன்னிட்டு சிறைக்கைதிகள் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு

  • May 25, 2026
  • 0 Comments

எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட பார்வையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த தினங்களில் கைதிகளைப் பார்ப்பதற்கு வருகை தரும் உறவினர்கள், அவர்களுக்கான உணவு மற்றும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது., அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் […]

ஐரோப்பா செய்தி

ஸ்டர்ஜன்–முரெல் வீடு சோதனையில் நீல கூடாரம் – பொலிஸார் விளக்கம்

  • May 25, 2026
  • 0 Comments

ஆபரேஷன் பிரான்ச்ஃபார்ம் (Operation Franceform) விசாரணையின் போது அமைக்கப்பட்ட நீல நிற தடயவியல் கூடாரம் குறித்து ஸ்கொட்லாந்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர் முன்னாள் முதல் அமைச்சர் Nicola Sturgeon (நிக்கோலா ஸ்டர்ஜன்)மற்றும் முன்னாள் SNP தலைமை நிர்வாகி Peter Murrell (பீட்டர் முரெல்)ஆகியோரின் வீட்டில் 2023 ஏப்ரலில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கூடாரம் அமைக்கப்பட்டது. விசாரணையின் ஒருங்கிணைப்பையும் ஆதாரங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொள்வனவு செய்த பொருட்களில் சில இன்னும் […]

ஐரோப்பா செய்தி

அரச நிதியுதவி குழந்தை பராமரிப்பு சேவையில் மறைமுக செலவுகள் – பெற்றோர்களுக்கு பெரும் சுமை

  • May 25, 2026
  • 0 Comments

அரசு நிதியுதவி பெறும் சிறுவர் பராமரிப்பு சேவைகளை பயன்படுத்தும் பெற்றோரிடம் விதிக்கப்படும் மறைமுகச் செலவுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன், போட்டி மற்றும் சந்தைகள் ஆணையத்திடம் (CMA) கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இங்கிலாந்தில் மூன்று மற்றும் நான்கு வயது சிறுவர்களுக்காக ஆண்டுக்கு 30 மணி நேர குழந்தை பராமரிப்பு சேவை வழங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் ஒன்பது மாதம் முதல் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று

  • May 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, லண்டனின் ஹீத்ரோ பகுதியில் 32.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மே மாதத்தில் இதற்கு முன் 32.8°C வெப்பநிலை அதிகபட்சமான பதிவானது அதற்கும் முன்னர் தென்மேற்கு லண்டனிலுள்ள புஷி பார்க்கிலும் (Bushy Park) இதே அளவிலான வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதனிடையே, நேற்றிரவு இதுவரை இல்லாதளவில் அதிக வெப்பமான மே மாத இரவாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு […]

செய்தி தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் ராஜினாமா -தவெகவில் இணைந்ததால் பரபரப்பு

  • May 25, 2026
  • 0 Comments

தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் சபாநாயகர் பிரபாகரை சந்தித்து 03 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கியுள்ளனர் பின்னர் மூவரும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக ஏற்கெனவே இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், வேலுமணி […]

இலங்கை செய்தி

இலங்கை ஏற்றுமதியில் 4.3% வளர்ச்சி – 5.78 பில்லியன் டொலர் வருவாய்

  • May 25, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் சுமார் 5.78 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. இந்த வருவாய் அதிகரிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 4.3% வளர்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் இலங்கை 1.38 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 6% வளர்ச்சியென ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. இதில் பொருட்கள் […]

error: Content is protected !!