பிரான்ஸ் பாடசாலைகளில் கைப்பேசிகளை தடை செய்யும் சட்டமூலம் – தீவிர முனைப்பில் அரசாங்கம்
புதிய கல்வியாண்டு தொடங்கும் முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலைப் பாடசாலைகளிலும் கைப்பேசி தடை செய்யப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இதற்கான சட்டத்தை இயற்ற ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உறுதிப்பூண்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் மௌட் ப்ரேஜியன் Maud Bregeon இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உயர்நிலைப் பாடசாலைகளில் கைபேசிகளுக்கான தடை அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட வழிமுறைகளை ஒரு நிலையான சட்டக் கட்டமைப்பிற்குள் செயல்படுத்துவதற்காக, பகுதியளவு ரத்து செய்யப்பட்ட சட்டத்தை, அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிரிவுகள் இல்லாமல், இயற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
எளிமையாகச் சொன்னால், உயர்நிலைப் பாடசாலைகளில் கைபேசிகளுக்கான தடை, ஒரு நிலையான, ஒருங்கிணைக்கப்பட்ட சட்டக் கட்டமைப்பின் கீழ், புதிய கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரலாம்.” எனவும் அவர் மேலும் கூறினார்.




