பிரான்ஸில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே மோதிய கார் – 07 பேர் கவலைக்கிடம்
பிரான்சின் கேன் Caen நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பாதசாரிகள் கடவையில் கார் ஒன்று வேண்டுமென்றே மக்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களின் ஏழு பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவரது நோக்கம் இன்னும் தெரியவில்லை என்றும் சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.




