ஐரோப்பா

பிரான்ஸில் சமூக ஊடகத் தடை கட்டுப்பாடு – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

  • August 14, 2026
  • 0 Comments

பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. குறித்த சட்டமூலமானது கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 15  வயதுக்குட்பட்ட சிறார்கள் சில இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதன் மூலம், வயது வந்தவர்கள் உட்பட ஒவ்வொருவரும் அவற்றை அணுகுவதற்கு முன்பு தங்கள் வயதை நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் அத்தகைய சான்று வழங்கப்பட வேண்டிய நிபந்தனைகளையும் வரம்புகளையும் குறிப்பிடத் தவறியுள்ளதாகவும், இதன்மூலம்  சட்டப் பாதுகாப்புகளை […]

ஐரோப்பா

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 1100 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம்

  • August 14, 2026
  • 0 Comments

தென்மேற்கு பிரான்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது. அப்பகுதியிலிருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், மேற்கு ஜெர்மனியிலும் காட்டுத்தீ காரணமாக 2,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐரோப்பா

பிரான்சில் 07 இலட்சம் வரி செலுத்துவோரின் தகவல்கள் திருட்டு

  • August 14, 2026
  • 0 Comments

பிரான்சில் தனிநபர்கள் மற்றும் பிரபல தொழில் அதிபர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக பிரெஞ்சு நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. தீங்கிழைக்கும் நபர் ஒருவர், ஜூன் மாத இறுதியில் வரி முகமையான பொது நிதிகளுக்கான பொது இயக்குநரகத்தில் ஊடுருவியதாக அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. திருடப்பட்ட தரவுகள் குறித்து தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள விபரங்கள் வெளியிடப்படும் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. “சம்பந்தப்பட்ட பயனர்கள், கலந்தாலோசிக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட்டிருக்கக்கூடிய தரவுகள் மற்றும், பொருந்தக்கூடிய இடங்களில், பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸுடன் ஒற்றுமையாக உள்ளோம் – செவுட்டா புலம்பெயர் நெருக்கடியை தொடர்ந்து புரூனர் கருத்து

  • August 5, 2026
  • 0 Comments

செவுட்டா புலம்பெயர்ந்தோர் நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயின் அரசாங்கத்துடன் “முழுமையான ஒற்றுமையுடன்” நிற்கிறது என்று   குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புரூனர் தெரிவித்துள்ளார். மொராக்கோவிலிருந்து சுமார் 70,000 ஐரோப்பிய ஒன்றியம் சாராத நாட்டினர் 24 மணி நேரத்திற்குள் ஸ்பெயினின் செவுட்டா பகுதிக்குள் நுழைந்த நெருக்கடியின் பின்விளைவுகள் குறித்து விவாதிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்கள் இணையவழியில் அவசரகாலக் கூட்டத்தை நடத்தின். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட புரூனர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் காட்டுத்தீ – ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள புகை!

  • July 28, 2026
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்திய பெரும் காட்டுத்தீயிலிருந்து ஐரோப்பா முழுவதும் புகை பரவுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பான புகைப்படத்தை  வானிலை ஆய்வு மையம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. குறித்த பதிவில், ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெரும் காட்டுத்தீ தொடர்கிறது. போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் போர்டோவிற்கு அருகில் பரவலான புகையை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மழை நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, மேலும் சில இடங்களில் வெப்பம் தீவிரமடையும், சில இடங்களில் வெப்பநிலை 40°C-க்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத்தீ – இரவோடு இரவாக மக்கள் வெளியேற்றம்

  • July 23, 2026
  • 0 Comments

பிரான்சின் போர்டோ நகருக்கு மேற்கே காட்டுத்தீ கடுமையாகப் பரவியதைத் தொடர்ந்து, இரவோடு இரவாக 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தத் தீ சுமார் 2,000 ஹெக்டேர் நிலத்தை எரித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தீயின் தீவிரம் அதிகமாக இருந்தபோதிலும், இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் காட்டுத்தீ அபாயம் – போராடும் தீயணைப்பு வீரர்கள்

  • July 22, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் இன்றை தினம் சில பகுதிகளில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தீவிபத்து அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியான ஜிரோண்டேவில் (Gironde) தீயணைப்பு வாகனம் தீப்பிடித்து எரிந்ததில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்பிக்யூக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர். மேலும், பத்தில் ஒன்பது காட்டுத்தீகள், தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ, […]

ஐரோப்பா

பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆழப்படுத்த விரும்பும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி – சீனா மீது பாய்ச்சல்

  • July 18, 2026
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆழப்படுத்த இருநாட்டு தலைவர்களும் உறுதிப்பூண்டுள்ளனர். ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டு அமைச்சரவை கூட்டங்களின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் சந்தித்துக்கொண்டனர். இதன்போது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இருவரும்,  பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சீனாவின் கடுமையான பொருளாதாரப் போட்டியை எதிர்கொள்ளவும் இருநாடுகளும் தயாராக இருப்பதாக […]

ஐரோப்பா

கடும் வெப்ப அலையை தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழை – பிரான்ஸில் இருவர் பலி

  • July 17, 2026
  • 0 Comments

நீண்டகால வெப்ப அலையைத் தொடர்ந்து, பிரான்சில் நேற்றிரவு கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட்-விக்டர்னியனில் ( Saint-Victurnien) மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், டோலோமியூவில் (Dolomieu) மின்னல் தாக்கியதில் மற்றொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி திடீர் மழை காரணமாக 53,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தென்கிழக்கு பிரான்சில்  முன்னர் பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை மெட்டியோ-பிரான்ஸ் நீக்கியுள்ளது.

உலகம்

பிரான்ஸை வாட்டி வதைக்கும் வெப்பம் – அணு உலைகளை நிறுத்த தீர்மானம்

  • July 12, 2026
  • 0 Comments

பிரான்ஸை வாட்டி வதைக்கும் வெப்ப அலை காரணமாக, மூன்று அணு உலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மேலும் எட்டு உலைகள் குறைந்த திறனில் இயங்கி வருவதாகவும் பிரான்சின் முக்கிய எரிசக்தி வழங்குநர் இன்று அறிவித்துள்ளது. வானிலை நிலவரங்கள் காரணமாகவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்குடனும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையால் ஏற்கனவே வெப்பமடைந்து வரும் ஆறுகளில் அதிகப்படியான சூடான நீரை வெளியேற்றுவதைத் தவிர்ப்பதற்காக மேற்படி முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் மின்சார உற்பத்திக்கு […]