ஐரோப்பா

பிரான்ஸின் ஒயின் உற்பத்தி 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

பிரான்சின் ஒயின் உற்பத்தி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான பிரான்ஸ், 33.9 மில்லியன் ஹெக்டோலிட்டர்களை  உற்பத்தி செய்யும் என இவ்வாண்டின் ஆரம்பத்தில் கணித்திருந்தது.

இது 2025 ஆம் ஆண்டை விட 6 சதவீதம் குறைவாகவும், 2021 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில், சராசரியை விட 17 சதவீதம் குறைவாகவும் இருக்கும்.

ஒரு ஹெக்டோலிட்டர் என்பது 100 லிட்டர் அல்லது 133 நிலையான ஒயின் பாட்டில்களுக்குச் சமம்.

சமீபத்திய வறட்சி உற்பத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் அறுவடை குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்