செய்தி விளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது RCB!

  • May 27, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் Qualifier 1 ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக நேடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தர்மசாலாவில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி , முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் காகிசோ ரபாடா […]

இந்தியா செய்தி

இந்தோ – பசுபிக் பாதுகாப்புக்காக இந்தியா, ஆஸ்திரேலியா கைகோர்ப்பு!

  • May 27, 2026
  • 0 Comments

சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong , பிரதமர் நரேந்திர மோடியை Narendra Modi நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான ‘விரிவான மூலோபாய கூட்டாண்மை’ குறித்து ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே பிரதமர் மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை […]

இலங்கை

ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!

  • May 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் வாசிலி ஒஸ்மாகோவை (Vasily Osmakov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். மொஸ்கோவில் மே 26 முதல் 29 ஆம் நாள் வரை நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான முதலாவது சர்வதேச மன்றம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதிகளின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புச் செயலர் ரஷ்யா சென்றுள்ளார். இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சருடனான […]

இலங்கை செய்தி

இலங்கையில் மீண்டும் work from home?

  • May 27, 2026
  • 0 Comments

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் ‘work from home ’ சிஸ்டம் பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. பொருளாதார நிலை மற்றும் எரிபொருள் சேமிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு ‘work from home’ சிஸ்டம் பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட்டதா என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்குத் தடையா? சிஐடியில் முறைப்பாடு!

  • May 26, 2026
  • 0 Comments

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என வெளியாகும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களை செய்வதற்கும் அம்மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு – […]

இலங்கை செய்தி

‘படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும்’ – யாழில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை!

  • May 26, 2026
  • 0 Comments

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார். வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (26.05.2026) செவ்வாய்க்கிழமை […]

அரசியல் இலங்கை செய்தி

விரைவில் மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு , “தேர்தலுக்கான நிதி […]

இலங்கை செய்தி

வடக்கில் விரைவில் காணி விடுவிப்பு?

  • May 26, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள நிலங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து, பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை வட பகுதிக்கு நேரில் வருகை தந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஜயத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக விடுவிக்கப்படவுள்ள முக்கிய நிலப்பரப்புகள் குறித்த விவரங்கள் வருமாறு:- பாதுகாப்புப் படையினரின் இன்றைய […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!

  • May 26, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய், நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றார். பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களை சந்திக்கும் நோக்கிலேயே அவரது டெல்லி வியம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேச்சு நடத்துவார் என தெரியவருகின்றது. இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் தமிழக முதல்வர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

உலகம் செய்தி

இஸ்ரேல் வேரோடு அழிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் சபதம்!

  • May 26, 2026
  • 0 Comments

இஸ்ரேலை பிராந்தியத்தின் ஆபத்தான புற்றுநோய் என்று குறிப்பிட்டுள்ள ஈரானின் உச்ச தலைவர் Mojtaba Khamenei, அந்த நாடு எதிர்காலத்தில் வேரோடு அழிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஹஜ் மற்றும் ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு சூளுரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவது இந்த ஆண்டு இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய கடமையாக இருக்கும் என்று Mojtaba Khamenei குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்லாமிய நாகரிகமே உலகை ஆளும் என்றும், எதிரிகளுக்கு எதிராக ஈரான் […]

error: Content is protected !!