செய்தி விளையாட்டு

ஆண்களுக்கு இணையான அங்கீகாரம் வேண்டும்: பாகிஸ்தான் அணித் தலைவி வலியுறுத்து

பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்படும் அதே அளவிலான அங்கீகாரமும் ஆதரவும் மகளிர் அணிக்கும் வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி பாத்திமா சனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்படும் அதே அளவிலான அங்கீகாரமும் ஆதரவும் மகளிர் அணிக்கும் வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி பாத்திமா சனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

25 வயதான பாத்திமா சனா, மகளிர் கிரிக்கெட் போட்டிகளைக் காண ரசிகர்கள் அதிகளவில் மைதானங்களுக்கு வருகை தந்து வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

2024ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் மகளிர் அணிக்குத் தலைமை தாங்கி வரும் அவர், தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) தொடரில் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், உலகளவில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சியடைந்து வருவதைப் போன்று பாகிஸ்தானிலும் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் சம அளவில் வளர்ச்சியடைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மைதானங்களில் ரசிகர்கள் திரளாக வருகை தருவதைப் போன்று மகளிர் போட்டிகளுக்கும் பெருமளவில் வருகை தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

மகளிர் ரி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேக அரைச்சதம் பெற்ற உலக சாதனையையும் பாத்திமா சனா தன்வசம் வைத்துள்ளார். அத்துடன், 2026ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுக்கொடுத்ததிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

2028ஆம் ஆண்டு மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் அணிகளின் எண்ணிக்கை 10 இலிருந்து 12 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முதலாவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரான இது, அந்நாட்டில் அதிகளவிலான பெண்கள் கிரிக்கெட்டில் ஈடுபடுவதற்கு ஊக்கமளிக்கும் என பாத்திமா சனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கும் சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர் கிரிக்கெட்டில் ஈடுபடுவதற்கான அதிக வாய்ப்புகளை வழங்குவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி