யாழ்ப்பாணம் - தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

விபத்தில் இளம் பெண் பலி: யாழில் சோகம்

  • October 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியில் டிரக்கரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுக்கொன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற அபிவிருத்தி உத்தியோகத்தரான சோபிதா (வயது 36) என்பவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்த 'பிளைதுபாய்' (FlyDubai) பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்த இஸ்ரேல் தயாராக இருந்ததாக சி.பி.எஸ் நியூஸ் (CBS News) செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

FlyDubai விமானத்தை சுட்டுவீழ்த்த தயார் நிலையில் இருந்த இஸ்ரேல்

  • October 6, 2026
  • 0 Comments

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்த ‘பிளைதுபாய்’ (FlyDubai) பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்த இஸ்ரேல் தயாராக இருந்ததாக சி.பி.எஸ் நியூஸ் (CBS News) செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இஸ்ரேலிடம் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலத் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப் பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டிற்குள் நுழையும் கட்டுப்பாட்டை இழந்த அல்லது அச்சுறுத்தலாகக் கருதப்படும் பயணிகள் விமானம் நாட்டின் முக்கிய இலக்குகளைத் தாக்குவதைத் தடுப்பதற்காகச் சுட்டு […]

சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசுப் படைகள், சர்வதேசக் கடல்வழிப் பாதையான 'பாப் எல்-மண்டெப்' (Bab el-Mandeb) நீரிணையை ஒட்டியுள்ள முக்கிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ராணுவ மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலகம் செய்தி

முக்கிய பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது யேமன் அரசுப் படை

  • October 6, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசுப் படைகள், சர்வதேசக் கடல்வழிப் பாதையான ‘பாப் எல்-மண்டெப்’ (Bab el-Mandeb) நீரிணையை ஒட்டியுள்ள முக்கிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ராணுவ மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தொடர் மோதல்களைத் தொடர்ந்து, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல்-மண்டெப் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள துபாப் (Dhubab) மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய ராணுவப் பகுதிகளை அரசுப் படைகள் […]

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கமும், சமூக ஊடக வெளிப்பாட்டுக்கான கூட்டமைப்பும் இணைந்து இன்று (06) முற்பகல் பத்தரமுல்ல பொல்தூவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன. இலங்கை செய்தி

பயங்கரவாத த்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக போராட்டம்

  • October 6, 2026
  • 0 Comments

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கமும், சமூக ஊடக வெளிப்பாட்டுக்கான கூட்டமைப்பும் இணைந்து இன்று (06) முற்பகல் பத்தரமுல்ல பொல்தூவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன. அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், யுக்திய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சுனந்த தேசப்பிரிய, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.  

துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற 'பிளைதுபாய்' (flydubai) விமானத்தைக் கவிழ்க்கும் முயற்சியில், விமானத்தின் தலைமை விமானியை கத்தியால் குத்திய துணை விமானி (co-pilot), ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது விமானப் பயிற்சியின் ஒரு பகுதியை நிறைவு செய்வதற்காக நியூசிலாந்திற்கு வந்திருந்ததாக நியூசிலாந்து காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

ஓமன் விமானியின் பின்புலம் பற்றி நியூசிலாந்தும் விசாரணை வேட்டை

  • October 6, 2026
  • 0 Comments

துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ‘பிளைதுபாய்’ (flydubai) விமானத்தைக் கவிழ்க்கும் முயற்சியில், விமானத்தின் தலைமை விமானியை கத்தியால் குத்திய துணை விமானி (co-pilot), ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது விமானப் பயிற்சியின் ஒரு பகுதியை நிறைவு செய்வதற்காக நியூசிலாந்திற்கு வந்திருந்ததாக நியூசிலாந்து காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. துணை விமானி 2018 நவம்பர் மற்றும் 2019 மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு மாத மாணவர் விசாவில் நியூசிலாந்தில் தங்கியிருந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குடிவரவுத் துறை பதிவுகளின்படி, […]

ஈரான் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாகவே, பிரித்தானிய விமானப் படையின் தளத்திலிருந்து அமெரிக்காவின் B-1 குண்டுவீச்சு விமானங்கள் அகற்றப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க போர் விமானங்களுக்கு அச்சுறுத்தல்: ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்

  • October 6, 2026
  • 0 Comments

ஈரான் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாகவே, பிரித்தானிய விமானப் படையின் தளத்திலிருந்து அமெரிக்காவின் B-1 குண்டுவீச்சு விமானங்கள் அகற்றப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். அமெரிக்கக் குண்டுவீச்சு விமானங்களின் ஐரோப்பிய முதன்மைத் தளமான RAF Fairford தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த விமானங்கள், அண்மையில் ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தன. கடந்த வாரம், ஈரானின் புரட்சிகரக் காவல்படையினரால் சட்டப்பூர்வ இலக்காக அறிவிக்கப்பட்ட இத்தளத்தின் அருகில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் ஐந்து பிரித்தானிய […]

இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் உள்கட்டமைப்பு வசதி ஆகிய 5 முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியா ஐரோப்பா செய்தி

இந்தியா, சுவிட்சர்லாந்துக் கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • October 6, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் உள்கட்டமைப்பு வசதி ஆகிய 5 முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கய் பார்மெலின் (Guy Parmelin) 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று […]

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியா இலங்கை செய்தி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள்: ஒப்பந்தம் கைச்சாத்து

  • October 6, 2026
  • 0 Comments

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனமும், இலங்கையின் கூட்டுறவு சம்மேளனமும் (COOPFED) இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையின் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் வணிகம் சார்ந்த விடயங்கள் குறித்தும் […]

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இல்லாத வகையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை எதிர்க்கட்சியான 'லிபரல்-நேஷனல் கூட்டணி' (Liberal-National Coalition) அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வு எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க திட்டம்

  • October 6, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இல்லாத வகையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை எதிர்க்கட்சியான ‘லிபரல்-நேஷனல் கூட்டணி’ (Liberal-National Coalition) அறிவித்துள்ளது. தற்காலிக மற்றும் மனிதநேய விசாக்களைக் குறைத்து, உயர் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான புதிய புலம்பெயர்வுக் கொள்கையை எதிர்க்கட்சி வெளியிட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வீட்டு வசதிப் பற்றாக்குறை காரணமாக ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வோருக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அடுத்த நான்கு […]

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 09) கையளிப்பதற்கு கையளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெள்ளிக்கிழமை கையளிப்பு

  • October 6, 2026
  • 0 Comments

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 09) கையளிப்பதற்கு கையளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. இப்பிரேரணையில் கையொப்பமிடும் பணிகள் இன்றுஆரம்பமாகவுள்ளன. சபாநாயகருக்கு எதிராக 49 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன என்று நாடாளுமன்ற அஜித் பி பெரேரா தெரிவித்தார்.