ஐரோப்பா

உக்ரைனின் தொடர் தாக்குதல் – ரஷ்ய துருப்புகளின் முக்கிய விநியோக பாதை துண்டிப்பு

உக்ரைன் நடத்திய தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக 3 பில்லியன் பவுண்ட் மதிப்புள்ள கிரிமியன் பாலத்தின் ஒரு பகுதி கடலில் சரிந்து விழுந்துள்ளது.

இதன்காரணமாக அப்பகுதியூடான  போக்குவரத்து தடைபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கெர்ச் பாலம் என்றும் அழைக்கப்படும் கிரிமியன் பாலம்  மொஸ்கோவின் துருப்புக்களுக்கான ஒரு முக்கிய விநியோகப் பாதையாகும்.

மேலும்  2014-ல் ரஷ்யா உக்ரேனிய தீபகற்பத்தை சட்டவிரோதமாக இணைத்த பிறகுஇ கட்டப்பட்ட இந்த பாலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு பெரும் குறியீட்டு மதிப்பை கொடுத்துள்ளது.

இதற்கிடையே கடந்த ஆறு மாதங்களாக உக்ரைன்இ கிரிமியா மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால்  அதிக இராணுவமயமாக்கப்பட்ட அந்தத் தீபகற்பத்தில் பரவலான மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்