தடைசெய்யப்பட்ட அமைப்புகளை நினைவுகூர்ந்தால் சட்டம் பாயும்: அரசு எச்சரிக்கை
“இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை நினைவுகூருவதற்கு அனுமதி அளிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று திலீபன் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் கூறுகையில்: “தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை நிர்வகிப்பதில் […]













