செம்பு மற்றும் கோபால்ட் தாதுக்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது காங்கோ
காங்கோ செம்பு மற்றும் கோபால்ட் தாதுக்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. கனிம வளங்களிலிருந்து அதிக மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், உள்நாட்டிலேயே பதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் கபாம்பா வாடும் (Louis Kabamba Watum), வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஜூலியன் பலுகு கஹோங்கியா (Julien Paluku Kahongya) மற்றும் பொருளாதார அமைச்சர் டேனியல் முகோகோ சாம்பா (Daniel Mukoko Samba) ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட அரசாணை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]













