காங்கோ, உகாண்டாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் தாய்லாந்து!
தாய்லாந்து அரசாங்கம் காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பரிசோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக அறிகுறியற்ற பயணிகளுக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலையும் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லாத எபோலாவின் புண்டிபுக்யோ வகையை, உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக WHO அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
WHOவின் அறிப்பை தொடர்ந்து தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை, காங்கோ மற்றும் உகாண்டாவை எபோலா பாதிப்பு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது.
மேலும், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அறிகுறியற்ற 10 பயணிகள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. அங்கு 900-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பல நாடுகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.




