எபோலா வைரஸ் – காங்கோவில் 75 சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு
காங்கோ குடியரசில் எபோலா நோய் பரவல் தொடங்கியதிலிருந்து 75 சுகாதாரப் பணியாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எபோலா நோய் தொற்று குறித்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னமே நோய் தொற்று பரவியிருக்கலாம் எனத் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையிலும்கூட, கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின்படி, உலகில் மிகக் குறைந்த சுகாதாரப் பணியாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் காங்கோவும் ஒன்று. அங்கு 10,000 பேருக்கு வெறும் 11 பேர் மட்டுமே உள்ளனர்.




