உலகம்

காங்கோவில் மேலும் இரு மாகாணங்களிலும் பரவி வரும் எபோலா தொற்று

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நோய் தொற்றானது விரிவடைந்து வருவதை உணர்த்தும் வகையில் புதிய மாகாணமொன்றில் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மே 15 அன்று அறிவிக்கப்பட்ட இந்த நோய்ப் பரவலானது, இடுரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு ஆகிய கிழக்கு மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அங்கு 1,759 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், சோபோ (Tshopo) மாகாணத்தின் தலைநகரமும் காங்கோவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கிசாங்கானியில் (Kisangani) பதிவான தொற்று விபரங்கள் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது குறித்த இரு பகுதிகளில் தொற்று பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது இவ்விரு மாகாணங்களில் தீவிர பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்