உலகம்

செம்பு மற்றும் கோபால்ட் தாதுக்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது காங்கோ

காங்கோ செம்பு மற்றும் கோபால்ட் தாதுக்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

கனிம வளங்களிலிருந்து அதிக மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், உள்நாட்டிலேயே பதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் கபாம்பா வாடும் (Louis Kabamba Watum), வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஜூலியன் பலுகு கஹோங்கியா (Julien Paluku Kahongya) மற்றும் பொருளாதார அமைச்சர் டேனியல் முகோகோ சாம்பா (Daniel Mukoko Samba) ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட அரசாணை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகின் மிகப்பெரிய கோபால்ட் உற்பத்தியாளராகவும், இரண்டாவது பெரிய செம்பு விநியோகஸ்தராகவும் விளங்கும் காங்கோ ஜனநாயகக் குடியரசு, தனது சுரங்கத் துறையிலிருந்து வருவாயை அதிகரிக்கும்  முயற்சியின் ஒரு பகுதியாக, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கத் துணைப் பொருட்களுக்கு  வரி விதிப்பு முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது, அதே நேரத்தில் புதிய துணைப் பொருள் வரி விதிப்பு முறைக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்