உலகம்

சீனாவில் காலணி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து – 28 பேர் உயிரிழப்பு

  • July 9, 2026
  • 0 Comments

சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் (Jinjiang) உள்ள காலணி தொழிற்சாலையொன்றில் இன்று பாரிய தீவிபத்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தீ விபத்து “பெரும் உயிரிழப்புகளை” ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பானவர்கள் “கடுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபுஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் (Jinjiang), உலகின் விளையாட்டுக் காலணிகளில் 20 சதவீதத்தை […]

உலகம்

சீனாவில் சீரற்ற வானிலை : நிலச்சரிவால் 21 பேர் உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

சீனாவின் மேற்கு கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, டான்சாங் (Tanchang) கவுண்டியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசுக்குச் சொந்தமான ஒரு வனவியல் பண்ணையில் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட உள்ளூர் கிராமவாசிகள் உட்பட 33 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 11 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டதாக […]

உலகம்

சீனாவில் நிலச்சரிவு – 17 பேர் மண்ணுள் புதையுண்டுள்ளனர்

  • July 7, 2026
  • 0 Comments

சீனாவின் மேற்கு மாகாணமான கான்சுவில் (Gansu) இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 33 பேர் மண்ணுள் புதையுண்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் 17 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள 16 பேரை மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்குத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் குறுக்கிடும் ஆறுகளைக் கொண்ட இந்த மலைப் பிரதேசம், குறிப்பாக மழைக்காலங்களில், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கு இலக்காகுகின்றமை குறிப்பிடத்தக்கது. […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு தனிப்பட்ட முறையில் போர் பயிற்சிகளை வழங்கிய சீனா – கசிந்த ஆவணம்

  • July 1, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு ரஷ்ய படைகளுக்கு சீனா தனிப்பட்ட முறையில் போர் பயிற்சி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயிற்சிக்காக ஜனாதிபதி  விளாடிமிர் புட்டினின் பாதுகாப்பு அமைச்சர் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்திருந்ததாகவும், குறைந்தது நான்கு ரஷ்ய மற்றும் சீனத் தளபதிகள் நேரடியாக பயிற்சி அளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது மேற்கத்தேய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் சீனா உதவிக் கரம் நீட்டுவதையும், ஆதரவளிப்பதையும் வெளிச்சம்போட்டு காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் பயிற்சி பற்றிய அறிவிப்புகளை […]

உலகம்

வெனிசுலா மீது விதிக்கப்பட்டுள்ள ஒருதலைபட்சமான தடைகள் – சீனா அதிருப்தி

  • June 30, 2026
  • 0 Comments

வெனிசுலா மீது சில நாடுகள் விதித்துள்ள ஒருதலைப்பட்சத் தடைகள், அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக சீனா கூறுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 62வது அமர்வின்  உரையாற்றியபோது, ​​  சீனத் தூதுக்குழுவின் அமைச்சர், ஆலோசகர் மு ஜியான்ஃபெங் இவ்வாறு தெரிவித்துள்ளார். நியாயமற்ற இந்த ஒருதலைப்பட்சத் தடைகள் வெனிசுலா மக்களின் அடிப்படை மனித உரிமைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். […]

உலகம்

ஆறாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா?

  • June 30, 2026
  • 0 Comments

சீன அரசாங்கம் தனது அடுத்த தலைமுறை போர் விமானத்தின் முதல் அதிகாரப்பூர்வக் காட்சியை விளம்பரம் ஒன்றில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது J-36 ஆறாம் தலைமுறை மறைமுகத் தாக்குதல் விமானம் என்று பரவலாக நம்பப்படுகிறது. நேற்று வெளியிடப்பட்ட காணொளியொன்றில், இரு விமானிகள் H-6 குண்டுவீச்சு விமானத்தின் புனைப்பெயரான லியு யேவிற்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் பேசிக்கொண்டிருந்தபோது ஜன்னல்களுக்கு வெளியே ஒரு விமானம் பறந்து செல்வது காண்பிக்கப்பட்டது. இந்த விரைந்து மறையும் காட்சியை, சீனாவின் ஆறாம் தலைமுறை போர் விமானத் திட்டத்தை […]

ஐரோப்பா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை அதிகரிக்க தீர்மானம்

  • June 24, 2026
  • 0 Comments

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைப்ரிட் கார்கள் மீதான  வரிகளை அதிகரிக்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவைச் சார்ந்திருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த வரி விதிப்பிற்கான நோக்கமாகும். இதற்கமைய உறுப்பு நாடுகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த வரியை விதிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் தயார் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், அரிய கனிமங்கள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களுக்காக உலகின் இரண்டாவது பெரிய […]

உலகம்

சீனாவின் தொடர்ச்சியான அத்துமீறல் – போர்கள பயிற்சிக்கு தயாராகும் தைவான்

  • June 21, 2026
  • 0 Comments

சீனாவின் அத்துமீறல்களை தொடர்ந்து தைவான் இராணுவம் போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வாரம் ஐந்து நாள் போர் தயார்நிலை பயிற்சியை நடத்தவுள்ளதாக  அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. தைபே அரசாங்கத்தின் எதிர்ப்புகளையும் மீறி, சீனா தனது சொந்தப் பிரதேசம் என்று உரிமை கோரும் பகுதியில் தொடர்ச்சியாக ஊடுருவி வருகின்ற நிலையில் போர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. “தயார்நிலை வரிசைப்படுத்தல் கட்டத்தின் போது, ​​அனைத்து நிலைகளிலும் உள்ள படைப்பிரிவுகளுக்குப் போர் நடைமுறைகள் மற்றும் போர்க்களச் சூழலுடன் […]

உலகம் முக்கிய செய்திகள்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஒருவர் உயிரிழப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில்  நேற்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், கிங்ஹாயின் (Qinghai ) ஹைக்ஸி (Haixi )மாகாணத்தில் உள்ள உயரமான பகுதியில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்க மையத்திற்கு அருகில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இருந்ததாகவும் அந்த சுரங்கத்தில் பணிப்புரிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு […]

உலகம்

பச்சை நண்டுகளை உட்கொண்டும், சிறுநீரை குடித்தும் வாழ்ந்த தொழிலதிபர்! பின்னணி என்ன?

  • June 13, 2026
  • 0 Comments

சீனாவின் 40 வயது மதிக்கத்தக்க தொழில் அதிபர் ஒருவர் விடுமுறையை கழிப்பதற்காக பிரபல விடுதிற்கு சென்றிருந்த நிலையில் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஹைனானில் உள்ள செங்மாய் கடற்கரையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், அவர் நிர்வாணமாகவும் சுயநினைவின்றியும் மிதந்த நிலையில் மீனவர்களால் காப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியைச் சேர்ந்த அந்த தொழிலதிபர், மே 27 அன்று ஹைக்கோ கடற்கரையில் இரவு நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவரிடம் தொலைபேசியும் […]