வெனிசுலா மீது விதிக்கப்பட்டுள்ள ஒருதலைபட்சமான தடைகள் – சீனா அதிருப்தி
வெனிசுலா மீது சில நாடுகள் விதித்துள்ள ஒருதலைப்பட்சத் தடைகள், அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக சீனா கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 62வது அமர்வின் உரையாற்றியபோது, சீனத் தூதுக்குழுவின் அமைச்சர், ஆலோசகர் மு ஜியான்ஃபெங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற இந்த ஒருதலைப்பட்சத் தடைகள் வெனிசுலா மக்களின் அடிப்படை மனித உரிமைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெனிசுலாவைத் தாக்கிய சமீபத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, சீனா அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவளித்து, அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதாகவும், அவர்கள் இந்தப் பேரழிவிலிருந்து மீண்டு, கூடிய விரைவில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், சில நாடுகள் வெனிசுலா மீது விதித்துள்ள ஒருதலைப்பட்சத் தடைகளால், அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவது கடினமாகியுள்ளதாகவும் மு ஜியான்ஃபெங் சுட்டிக்காட்டினார்.




