ஐரோப்பா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை அதிகரிக்க தீர்மானம்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைப்ரிட் கார்கள் மீதான  வரிகளை அதிகரிக்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவைச் சார்ந்திருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த வரி விதிப்பிற்கான நோக்கமாகும்.

இதற்கமைய உறுப்பு நாடுகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த வரியை விதிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் தயார் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், அரிய கனிமங்கள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களுக்காக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய BYD, Chery மற்றும் Cyc போன்ற சீனக் கார்களைக் குறிவைத்து புதிய வரிகளை விதிப்பதில் ஐரோப்பிய ஆணையம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறதுது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மீதான கூடுதல் வரி 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அமலில் இருந்தாலும், ஹைப்ரிட் வாகனங்களுக்கு இதுவரை அந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

சீன ஹைப்ரிட் வாகனங்களுக்கு கூடுதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதன் காரணமாக, கடந்த மே மாதம் முதல் ஜெர்மனியில் அதிகம் விற்பனையாகும் கார் பிராண்டாக சீன BYD கார் உருவெடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்