சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஒருவர் உயிரிழப்பு!
சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் நேற்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம், கிங்ஹாயின் (Qinghai ) ஹைக்ஸி (Haixi )மாகாணத்தில் உள்ள உயரமான பகுதியில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்க மையத்திற்கு அருகில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இருந்ததாகவும் அந்த சுரங்கத்தில் பணிப்புரிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




