உலகம்

சீனாவில் சீரற்ற வானிலை : நிலச்சரிவால் 21 பேர் உயிரிழப்பு

சீனாவின் மேற்கு கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

டான்சாங் (Tanchang) கவுண்டியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அரசுக்குச் சொந்தமான ஒரு வனவியல் பண்ணையில் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட உள்ளூர் கிராமவாசிகள் உட்பட 33 பேர் சிக்கிக்கொண்டனர்.

அவர்களில் 11 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

டான்சாங்கில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள், மத்திய மற்றும் தெற்கு சீனா முழுவதும் ஏற்பட்ட தனித்தனி வானிலை பேரழிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்