உலகம்

பச்சை நண்டுகளை உட்கொண்டும், சிறுநீரை குடித்தும் வாழ்ந்த தொழிலதிபர்! பின்னணி என்ன?

சீனாவின் 40 வயது மதிக்கத்தக்க தொழில் அதிபர் ஒருவர் விடுமுறையை கழிப்பதற்காக பிரபல விடுதிற்கு சென்றிருந்த நிலையில் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஹைனானில் உள்ள செங்மாய் கடற்கரையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், அவர் நிர்வாணமாகவும் சுயநினைவின்றியும் மிதந்த நிலையில் மீனவர்களால் காப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியைச் சேர்ந்த அந்த தொழிலதிபர், மே 27 அன்று ஹைக்கோ கடற்கரையில் இரவு நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அப்போது அவரிடம் தொலைபேசியும் இல்லாததால் யாரையும் உதவிக்கு அழைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் அவருக்கு கடலில் நீந்தி பழக்கம் இல்லையென்பதாலும் 07 நாட்கள் உயிருக்கு போராடியதாக தெரிவிக்கப்படுகிறது.

கடலில் நீந்திய அனுபவம் இல்லாததால், பாரம் அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக அவர் தனது கால்சட்டை, காலணிகள், கைக்கடிகாரம் மற்றும் மோதிரத்தை கழட்டியதுடன், தனது உடலை ஒரு காற்றுபை போல் இருக்கும்படி வைத்துள்ளார்.

அத்துடன் ஒரு மிதவையைக் கண்டுபிடித்து அதன் மீது 07 நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடலில் சிக்கிய இரண்டாவது நாளில் பகல் நேரத்தில் அதிக சூரிய வெப்பம் தாக்கிய அதேசமயம் இரவு நேரம் குளிராக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதன்போது தனது உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள தனது சிறுநீரை தனது உடல்மீது ஊற்றிக்கொண்டதாக கூறியுள்ளார் .

05ஆவது நாளில் பசிக்கொடுமையால் நண்டுகளை பச்சையாக உட்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தாகத்தைத் தணிப்பதற்காக,  கடல் நீரையும் தனது சொந்த சிறுநீரையும் குடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 2 அன்று, செங்மாயைச் சேர்ந்த இரண்டு மீனவர்களால்  காப்பாற்றப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடல் பரிசோதனைகளில் அவர் கடுமையான நீரிழப்பு மற்றும் தோல் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், செரிமான மண்டலத்தில் அழற்சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்