ஐரோப்பா

ஸ்பெயினுடனான எல்லையை மூடிய இத்தாலி – ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை நிறுத்தம்

சட்டவிரோத குடியேறிகள் ஸ்பெயினை முற்றுகையிட்டுள்ள நிலையில்,  அந்நாட்டுடனான தனது கடல் மற்றும் வான்வழி எல்லைகளை மூடுமாறு இத்தாலியின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இத்தாலியின் குடியேற்றப் பகுப்பாய்வு மற்றும் எல்லைப் பாதுகாப்புக் குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சர் மத்தேயோ பியாண்டெடோசி  (Matteo Piantedosi) தலைமையில் நேற்று  காலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வந்திறங்கியதைத் தொடர்ந்து, பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் துணைப் பிரதமர்கள் அன்டோனியோ தஜானி, மத்தேயோ சல்வினி ஆகியோர் ,இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்