கருத்து & பகுப்பாய்வு

ஒரேவளம், இருவேறு திசையில் பயணம் – நோர்வேயிடம் பிரித்தானியா பாடம் கற்க வேண்டும்..

பிரித்தானியாவை போலவே அதிக எண்ணெய் வளத்தை கொண்ட நாடுதான் நோர்வே. தற்போது பிரித்தானியாவும் எண்ணெய், எரிவாயு நுகர்வுக்கு அந்நாட்டை சார்ந்தே இருக்கிறது.

நோர்வே உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கியமானக் காரணம் அந்நாடு தனது எண்ணெய் வளத்தை பயன்படுத்தி இலாபம் ஈட்டியமையே.

அண்மையில் பிரித்தானியாவின் வடகடல் பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தை அகழ்ந்தெடுக்க புதிய பிரதமர் பர்னம் அனுமதி அளித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் வருமானம் 02 பில்லியனாக உயர்ந்துள்ளது.

இதற்கமைய இருநாடுகளிடமும் ஒரே வளம் காணப்பட்டும் ஏன் பிரித்தானியா பின்தங்கியிருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்,

நோர்வே, 1970-களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளங்களிலிருந்து கிடைத்த வருமானத்தை அன்றாட அரசுச் செலவுகளுக்குப் பயன்படுத்தாமல், உலகின் மிகப்பெரிய அரசுச் செல்வ நிதியாக (Sovereign Wealth Fund) முதலீடு செய்தது. இன்று அதன் மதிப்பு சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக உள்ளது.

அதேநேரம்  எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் துறையில் நிறுவனங்களுக்கு 78% வரை வரி விதிக்கப்படுவதுடன், அந்த வருமானம் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சொத்துகளில் முதலீடு செய்யப்படுகிறது. தற்போது, அந்த நிதியின் முதலீட்டு வருமானமே எண்ணெய் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, பிரித்தானியா தனது வடக்கடல் எண்ணெய் வருமானத்தின் பெரும்பகுதியை அன்றாட அரசுச் செலவுகளுக்கும் வரிக் குறைப்புகளுக்கும் பயன்படுத்திவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது.

பின்னர், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை குறைத்து, காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்தை அதிகம் நம்பும் கொள்கையைப் பின்பற்றியதாகவும், இதன் விளைவாக நோர்வே போன்ற நாடுகளிடமிருந்து மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டது.

அத்துடன் எட் மிலிபான்ட் போன்ற நிகர பூஜ்ஜிய வெறியர்கள் எரிசக்தித் துறையின் பொறுப்பில் இருந்தவரை எண்ணெய் அகழ்விற்கு முட்டுக்கட்டையாக இருந்தது மற்றொரு காரணமாகும்.

இருப்பினும் தற்போது புதிய பிரதமர் இதற்கான மார்க்கத்தை திறந்துவிட்டுள்ளார். இதன் மூலம் பயன் அடையளாமா? அல்லது பூஜ்ய உமிழ்வு கோட்பாட்டின் கீழ் கரூவூல நிதியை குறைத்து கடனை உயர்த்தலாமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி – டெய்லி மெயில்

VD

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை