சீனாவில் நிலச்சரிவு – 17 பேர் மண்ணுள் புதையுண்டுள்ளனர்
சீனாவின் மேற்கு மாகாணமான கான்சுவில் (Gansu) இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் 33 பேர் மண்ணுள் புதையுண்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் 17 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஞ்சியுள்ள 16 பேரை மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்குத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் குறுக்கிடும் ஆறுகளைக் கொண்ட இந்த மலைப் பிரதேசம், குறிப்பாக மழைக்காலங்களில், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கு இலக்காகுகின்றமை குறிப்பிடத்தக்கது.




