ஐரோப்பா

சீனாவிற்காக உள்துறை அமைச்சகத்தின் கணினி அமைப்பை நோட்டமிட்ட பொலிஸ் அதிகாரி கைது!

  • May 7, 2026
  • 0 Comments

சீனாவிற்காக உளவு பார்த்த இருவரை பிரித்தானிய நீதிமன்றம்  குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்துள்ளது. சீன-பிரிட்டிஷ் இரட்டைக் குடியுரிமை பெற்ற பீட்டர் வாய் (38) மற்றும் பில் யுவன் (65) ஆகிய இருவரும், ஓல்ட் பெய்லியில் இன்று  நடந்த விசாரணையைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஹொங்காங் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்தின் கணினி அமைப்பை  நோட்டமிட்டதற்காகவும், பொது அலுவலகத்தில் முறைகேடாக நடந்துகொண்டதற்காகவும் பீட்டர் வாய் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வீதி போக்குவரத்து சோதனை சாவடியில் மனித ரோபோக்களை களமிறக்கிய சீனா!!

  • May 6, 2026
  • 0 Comments

கூட்டத்தை கட்டுப்படுத்த  உதவும் வகையில் சோதனை சாவடிகள் உள்பட முக்கிய இடங்களில் சீனா தனது   முதல் ரோபோ காவல் படையை களமிறக்கியுள்ளது. தெற்கு சீனாவின் தொழில்நுட்ப மையமான ஹாங்சோவில் (Hangzhou) 15 மனித உருவ போக்குவரத்து மேலாண்மை ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல்களை சுட்டிக்காட்டுதல், போக்குவரத்தை நெறிப்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளை இந்த ரோபோக்கள் மேற்கொள்கின்றன. இருப்பினும், இந்த ரோபோக்களின் இருப்பு எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியது. ஏனெனில்,  மக்கள் தெருக்களிலும் பாதசாரி கடக்கும் […]

உலகம்

ட்ரம்பிற்கு முன்னதாக சீனாவை சென்றடைந்த அராக்சி!

  • May 5, 2026
  • 0 Comments

தெஹ்ரான் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே நடைபெற்று வரும் ராஜதந்திர ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று சீனாவுக்குப் பயணம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது அராக்சி தனது சீனப் பிரதிநிதியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்து விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர், மே 14 முதல் தொடங்கும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் சீனாவின் தலைவர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ள நிலையில் அராக்சியின் இந்த விஜயம் […]

உலகம் செய்தி

லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் படை பணியை நீட்டிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

  • May 2, 2026
  • 0 Comments

லெபனானில்நீண்டகாலமாக செயற்பட்டு வரும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் (UNIFIL) பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஃபூ காங் (Fu Cong) தெரிவித்துள்ளார். நியூயார்க் (New York) நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் லெபனானின் தற்போதைய நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, […]

உலகம்

தைவான் அதிபருக்கு வான்வழி அணுகளை மறுத்த நாடுகள் – சீனாதான் காரணமா?

  • April 26, 2026
  • 0 Comments

தைவானின் அதிபர் லாய் சிங்-தே ( Lai Ching-te’s) ஆப்பிரிக்க நாடான  எஸ்வதினிக்கு  செல்ல இருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் லின் சியா-லுங் ( Lin Chia-lung) எஸ்வதினிக்கு பயணம் மேற்கொண்டார். சீனிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே அதிபர் லாயின் விமானம் செஷல்ஸ், மொரிஷியஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளின் வான்பரப்பை அணுக அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே மேற்படி பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் […]

செய்தி

இலங்கைக்கு கைகொடுக்கும் சீனா!

  • April 5, 2026
  • 0 Comments

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாளை (06) விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் வகை மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நாட்டை வந்தடையும் திகதி ஆகியன தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

கொழும்புக்கு தோள் கொடுக்கும் பீஜிங்! அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 23, 2025
  • 0 Comments

“ இலங்கைக்கு தேவையான உதவிகளை சீனா நிச்சயம் வழங்கும்.” – என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமானவாங் ஜுன்செங் உறுதியளித்துள்ளார். “ ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் அவர் கூறினார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுக்குழு, ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (23) சந்தித்து பேச்சு நடத்தியது. அனர்த்த நிலைமையில் […]

இலங்கை செய்தி

சீன உயர்மட்ட குழுவும் கொழும்பு வருகை: பின்னணி என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

இருநாள் பயணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (23) இலங்கை வந்தடைந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குழுவின் செயலாளரும், அக்கட்சியின் 20 ஆவது மத்திய குழு உறுப்பினருமான வாங் ஜுன்செங் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது. அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்களுக்குரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் முனையத்தில் அமைச்சருக்கும், சீனத் தூதுக்குழுவின் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை நோக்கி சர்வதேச பிரதிநிதிகள் படையெடுப்பு: முக்கிய புள்ளிகளை களமிறக்கும் டில்லி, பீஜிங்!

  • December 21, 2025
  • 0 Comments

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியல் குழு தலைவர் ஜாவோ லெஜி நாளை மறுதினம் (23) இலங்கை வருகின்றார். சீனாவில் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய நபராக இவர் கருதப்படுகின்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) கொழும்புவரும் நிலையிலேயே இவரது விஜயமும் இடம்பெறுகின்றது. ஜாவோ லெஜியின் கொழும்பு பயணம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியாக இருந்தன. இவ்விஜயத்தின்போது அவர் இலங்கை மீண்டெழுவதற்குரிய உதவித்திட்டங்களையும் அறிவிக்க இருந்தார். இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

திங்களன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

  • December 20, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இலங்கைக்கான மேலதிக உதவித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார் என தெரியவருகின்றது. இலங்கைக்கு உயர்மட்ட பிரதிநிதியொருவரை சீனா அனுப்பி இருந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெறுகின்றது.