இலங்கை செய்தி

தலைநகர் கொழும்பு வீதிகளை அலங்கரிக்கவுள்ள மெட்ரோ பஸ்கள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ராகமை முதல் பத்தரமுல்ல வரையிலான வழித்தடங்களில் இந்தப் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பஸ்கள் இயக்கப்படும் முக்கிய மத்திய நிலையமாகப் பொரளை விளங்கும் என்று ‘மெட்ரோ பஸ்’ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முழுமையாகக் குளிரூட்டப்பட்ட சொகுசு வசதிகளைக் கொண்ட மெட்ரோ பஸ்களே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பஸ்களில் பயணக் கட்டணம் செலுத்தும் நடைமுறை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

இப் பஸ்களைப் பராமரிப்பதற்காகப் புதிதாக 4 பணிமனைகளை (Depots) நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை